இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம்!

0
463

இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையின் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரிக்கும் என தேசிய உற்பத்தி மற்றும் அதன் மூலப் பொருட்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணம் என அவர் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் நிதியுதவியினால் இலங்கையின் பணவீக்கத்தினை சீர்செய்ய முடியாது என்றும் அது தற்காலிக தீர்வு மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை எதிர்நோக்கிய நிதி, பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை சீர் செய்ய புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடியும் என நம்புவதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.