(Mullivaikal remember day meeting Chief Minister student representative)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து, கூட்டாக முன்னெடுக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்துள்ளது.
அத்துடன் இதுதொடர்பில் சந்திப்பொன்றை நடத்த அவர்கள் பகிரங்கமாக ஊடகங்களின் ஊடாக முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்று மாலை 5.00 மணியளவில் அவர்களை சந்திக்க வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்வந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதற்கான அனுமதி பல்கலைக்கழகத்தால் மறுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, திருநெல்வேலியிலுள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். கலந்துரையாடலின் பின்னராக ஊடகங்களிடையே மாணவ பிரதிநிதிகள் பேசியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து அதனை கூட்டாக முன்னெடுப்பது தொடர்பில் முதலமைச்சருடன் சந்திப்பொன்றை நடத்த விரும்புவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
அத்துடன் இதற்கான நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு அவர்கள் பகிரங்கமாக ஊடகங்களின் ஊடாக கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் அவர்களை சந்திக்க முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்வந்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் மதத் தலைவர்களும் பங்கெடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Mullivaikal remember day meeting Chief Minister student representatives