BJP Senior Leader Sreeramulu ssued video dealing bribe 100 crore
சுரங்க ஊழல் வழக்கில் சாதகமான உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்திய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகனுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் பி. ஸ்ரீராமுலு 100 கோடி இந்திய ரூபா இலஞ்சம் கொடுப்பதாக பேரம் பேசும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இந்திய கர்நாடக மாநிலத் தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிடுவதை தடை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி இன்று மனுவும் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், ஸ்ரீராமுலு குறித்த இந்த விடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடகத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் வெட்டி எடுத்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கக்கோரிக் கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணணனுக்கு 150 கோடி ரூபா இலஞ்சம் கொடுக்க பாஜக தலைவர்கள் பேரம் பேசினார்கள்.
இந்த பேரத்தில் கே.பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீனிஜன், ஜனார்த்தன ரெட்டியின் நண்பர்கள், கேப்டன்ரெட்டி, சுவாமிஜி ரஜனிஷ், பாலன், பா.ஜ.க. மூத்த தலைவர் ஸ்ரீராமுலு ஆகியோர் பேரம் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளோம்.
இந்தப் பேரம் கடந்த 2010ஆம் ஆண்டு கே.ஜி.பாலகிருஷ்ணன் ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் நடந்துள்ளது. இதில் 150 கோடி ரூபா பேரத்தில் 100 கோடி ரூபா வரை கைமாறியுள்ளது.
மேலும்இ அந்த வீடியோவில் நீதிபதியின் மருமகன் அங்கிருந்தவர்களிடம் இன்னும் 50 கோடி ரூபா வர வேண்டும். என்று கூறுகிறார். இதைப் பார்க்கும் போது நீதித்துறையின் மீது நம்பிக்கை போய்விட்டது போன்ற உணர்வு வருகிறது.
தற்போது, பதாமி தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். உடனடியாக அவரை தகுதிநீக்கம் செய்யத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடியும் பதில் அளிக்க வேண்டும் என குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே கர்நாடகத்தில் பதாமி தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், பதாமி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக தெரிவித்தனர் எனத் தெரிவித்தார்.
BJP Senior Leader Sreeramulu ssued video dealing bribe 100 crore
more Time Tamil News Today
- காதலால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபலங்கள்!
- தமிழ்ப் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட கலாபக்காதலன் ; ஆர்யாவுக்கு ஸ்பெஷல் விருது
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
- கேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்!
- ஈரானிய ஜனாதிபதிக்கான சுவிஸ் அழைப்பு இன்னும் திறந்திருக்கிறது
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news