உலகளவில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக மாறிய இலங்கை!

0
461

உலகிலேயே அதிக வருடாந்த பணவீக்க வீதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென அமெரிக்க பொருளாதார வல்லுனர் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே (Steve Hanke) தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையின்படி, சிம்பாப்வே மட்டுமே இலங்கையை விட அதிக பணவீக்கத்தைக் காட்டும் நாடாக உள்ளது. இலங்கைக்கு அடுத்தபடியாக துருக்கி உள்ளது.

அதேவேளை அண்மைக்காலமாக இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே (Steve Hanke) கண்காணித்து வருகிறார்.

மேலும் இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 130 வீதத்திற்கு மேல் செல்லும் என முன்னரே அவர்(Steve Hanke) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.