எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை: மேலும் ஒருவர் கைது!

0
578

இலங்கையில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் நிட்டம்புவ – ஓவிட்டவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.