சவூதி அரேபியாவில் இறந்த இலங்கையர்: 3 மாதங்களின் பின் உடல் நாடு திரும்பியது

0
880

சவூதி அரேபியாவில் பணிபுரிந்த நிலையில் மரணித்தவரின் சடலம் மூன்று மாதங்களின் பின்னர் இலங்கையை வந்தடைந்துள்ளது.

மட்டக்களப்பு வாகரை பகுதியை சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு அனுப்பப்பட்டு உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வாகரை பாடசாலை வீதியின் அருகில் வசிக்கும் வேதாரணியம் சுதாகாரன் (வயது 38) என்பவரின் சடலமே வாகரை மயானத்தில் நேற்று முன்தினம் (16-06-2022) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர் சவூதி அரோபியாவில் பணிபுரிந்து வந்த சமயம் உடல் உபாதைக்குள்ளான நிலையில் இவ்வருடம் மார்ச் மாதம் 26ஆம் திகதி மரணமடைந்திருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகாத இவர் கடந்த பத்தாண்டுகளாக சவூதி அரேபியாவிலேயே தொழில் வாய்ப்பை பெற்று பணியாற்றி வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.