வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

0
463

நாட்டின் பல பகுதிகளில் 31.03.2022 முதல் 15.05.2022 வரை இடம்பெற்ற தீ வைப்பு, கொள்ளை, கொலை உள்ளிட்ட அனைத்து வகையான சொத்து சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி வழக்கறிஞர் பி.பி.அலுவிஹார தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.

அதன்படி, ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, மேலதிக பிரதம மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ்வசந்த குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனேகா ஹேரத் இந்தக் குழுவின் செயலாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.