(Pungudutivu Student Vithya Sivaloganathan Murder case judges transfer)
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்தி முடித்த தீர்ப்பாயத்தின் (ரியல் அட் பார்) மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசி மகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியுயர்வு பெற்ற சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அத்துடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம். அப்துல்லா நியமிக்கப்படுகிறார்.
சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றுவார்.
More Tamil News
- வடமாகாணத்தில் 951 விபத்துக்கள் ; 16 பேர் பலி
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
- ஊவா மாகாண தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில்
- சிறைச்சாலை காவலர்களுக்கு ஏற்பட்ட கதி
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவிற்கு மீண்டும் விளக்கமறியல்
- ‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’: காக்கா அண்ணாவின் மனதை உருக்கும் காணொளி
- இன அழிப்பு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் பிரகடனம்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Pungudutivu Student Vithya Sivaloganathan Murder case judges transfer