(samsung galaxy s8 lite images launch date)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
SM-G8750 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருக்கின்றன. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் சீனாவின் JD.com வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங் எஸ் சீரிஸ் லைட் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080×2220 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
– அட்ரினோ 512GPU
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– 16 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், யுஎஸ்பி
– கைரேகை சென்சார்
– ஐரிஸ் சென்சார்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
OUR GROUP SITES