71 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 8 ம் திகதி முதல் மே 19 ம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெறுகின்ற 2018 கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு பற்றுகின்றார். இவருக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் என எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்கு இல்லை.aishwarya rai join Instagram
கடந்தாண்டு நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராயிடம் ஏன் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கவில்லை எனக் கேட்டதற்கு “சமூக வலைத்தளங்களில் தனி நபர்கள் தங்களது பலத்தைக் காட்ட பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களால் நாம் பலவீனமடையக் கூடாது. ஆனால், நான் சமூக வலைத்தளங்களில் நுழையும் நேரம் வந்துவிட்டது” என்றார் அவர்.aishwarya rai join Instagram
எனவே கடந்தாண்டு சொன்னது போல முதல் முறையாக மே 11 ஆம் தேதி, இன்று இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராய் நுழைய இருக்கிறார். அவர், தனது கேன்ஸ் திரைப்பட விழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தவுள்ளார்.
மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெறவுள்ள சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் நாளை, 17 ஆவது முறையாக பங்கேற்கிறார் ஐஸ்வர்யா ராய்.
இவரைப் போல மற்ற பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர், கங்கணா ரனாவத், ராணி முகர்ஜி ஆகியோருக்கும் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லை.
மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகைகளான கங்கணா ரனாவத், காலா பட நாயகி ஹூமா குரேஷி, சோனம் கபூர், தீபிகா படுகோன் உட்பட பல நடிகைகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
**Most related Tamil news**
- பிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்!
- விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!
- ”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி
- தொடர் கொலை மிரட்டல் : சிக்கல்களில் தவிக்கும் பிரகாஷ்ராஜ்..!
**Tamil News Groups Websites**