(tamilnews mahindananda aluthgamage courts case postponed)
சட்டவிரோதமாக சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி கொழும்பு, கிங்சி வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி வழக்குரைஞர் துசித் முதலிகேவின் நெறிப்படுத்தலின் கீழ் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஓட்டுனராக பணிப்புரிந்த வசந்த ராஜபக்ச என்பவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குற்றம்சுமத்தப்பட்ட மகிந்தானந்த அளுத்கமகே, பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(tamilnews mahindananda aluthgamage courts case postponed)
More Tamil News
- சிறுத்தையினால் அச்சத்தில் வாழும் தோட்ட மக்கள்
- வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்கப் போவதில்லை
- சமுர்த்தி நிதியத்தில் 675 கோடி ரூபாய்க்கு என்ன நடந்தது?
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி
- ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியர் பிணையில் விடுதலை
- நாளை 10 மணிநேரம் நீர்வெட்டு
- பருப்பின் விலை அதிகரிப்பு