கனடாவில் முகநூல் நண்பரை நம்பியவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்!

0
523

கனடாவில் முகநூல் ஊடாக பழக்கமான நபரை நம்பி அவருடன் வேலைக்கு சென்றவருக்கு மோசமான அனுபவம் கிடைத்த நிலையில் குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரொறன்ரோவை சேர்ந்த ஏஞ்சல் டுன் டவாலூஸ் (33) என்பவருக்கு பேஸ்புக் மூலம் 23 வயதான இளைஞரிடம் பழக்கம் ஏற்பட்டது. குறித்த இளைஞரை வணிக கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஏஞ்சல் சேர்த்துவிட்டார்.

இருவரும் பல இடங்களில் சேர்ந்து வேலை செய்த நிலையில் இளைஞர் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகாரில் பொலிசார் ஏஞ்சலை கைது செய்துள்ளதுடன் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த அதிகாரிகள் இது குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

கனடாவில் முகநூல் நண்பரால் பாதிப்புக்குள்ளான நபர்