(Sri Lanka 04 students travel United States)
அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்துகொள்வதற்கு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இலங்கை பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகள் 4 பேர் அமெரிக்காவிற்கு பயணமாகவுள்ளனர்.
இவர்களுக்கான பயணச்சீட்டு கல்வி அமைச்சின் மூலமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று காலை பயணச்சீட்டுகளை தனது அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பெனின்சுலா நகரில் நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியில் சர்வதேச ரீதியாக 72 நாடுகளை சேர்ந்த 1700 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
2007 ஆம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்கள் தொடாச்சியாக இதுவரை இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதுடன், இதன்போது அவர்கள் அங்கு நடைபெறுகின்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இலங்கை பொறியியலாளர் கல்வியகம் வருடங்தோறும் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களை தெரிவுசெய்து இரண்டு கட்டமாக போட்டிகளை நடாத்துகின்றன.
இந்தப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுகின்ற மாணவர்களை வருடந்தோறும் அமெரிக்காவில் நடைபெறுகின்ற கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்படுகின்றனர். அதன் அடிப்படையிலேயே இந்த வருடமும் தெரிவு செய்யப்பட்டு பங்குபற்றுகின்றனர்.
கிம்ஹான் விஜேவர்தன (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி) கஜிந்து பண்டார (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி) சுபுன்சில்வா (டெமகினோன் கல்லூரி கந்தானை) ருமல் இந்துவர (ஆனந்த தேசிய கல்லூரி புத்தளம்) ஆகிய நான்கு மாணவர்களே இந்த நிகழ்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கையில் இருந்து பயணமாகின்றனர். கண்காட்சி தொடர்ந்து ஜந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- யோகேஸ்வரி பற்குணராசாவை எச்சரித்தார் இமானுவேல் ஆனோல்ட்
- வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்கப் போவதில்லை
- சமுர்த்தி நிதியத்தில் 675 கோடி ரூபாய்க்கு என்ன நடந்தது?
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி
- ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது
- 08 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
- பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- வெலிக்கடை துப்பாக்கி பிரயோகம்; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Sri Lanka 04 students travel United States