வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!

0
703
Bersih request extend voting, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

{ Bersih request extend voting }

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான கால அவகாசம் மாலை மணி 5.00 அளவில் முடிவடையுள்ள நிலையில் இன்னும் பல வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்களிப்பதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீடிக்க வேண்டுமென பெர்சே இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மாலை மணி 3.00 அளவில் 69 வீதத்தினரின் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த பொதுத்தேர்தலை ஒப்பிடுகையில் மாலை மணி 3.00 அளவில் 70 வாக்குகள் பதிவாகியிருந்தன. இம்முறை 14,449,200 பதிவு பெற்ற வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதுவரையில் பலர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருக்கின்றனர். மாலை மணி 5.00 ஆனாலும் வாக்காளர்கள் அந்த இடத்தைவிட்டு வாக்களிக்காமல் செல்லக்கூடாது. மாறாக, அங்கு வாக்களித்து விட்டுதான் செல்ல வேண்டுமென பெர்சே வலியுறுத்தி வருகின்றது.

Tags: Bersih request extend voting

<< RELATED MALAYSIA NEWS>>

* மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!

*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!

*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!

*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

<<Tamil News Groups Websites>>