நாயைக் கட்டி வீதி வழியே தரதரவென இழுத்துச் சென்றவர் கைது

0
636
drunk trike driver dragged dog, drunk trike driver dragged, drunk trike driver, trike driver dragged dog, driver dragged dog, Tamil Netherland news, Netherland Tamil news

(drunk trike driver dragged dog)

குடித்து விட்டு ட்ரைக்கை (மூன்று சில்லுகளைக் கொண்ட பைக் போன்ற வாகனம்) ஓட்டிச் சென்ற, Hoogerheide ஐச் சேர்ந்த 58 வயதான நபரை பொலிசார் கைது செய்தனர். தனது ட்ரைக்கில் பல கிலோமீட்டர்கள் ஓட்டிய அவர், பின்னால் ஒரு நாயையும் அதனுடன் கட்டி இழுத்துச் சென்றார். அவர் குறைந்தது இரண்டு கார்களைத் தாக்கியுள்ளார், என போலீசார் தெரிவித்தனர்.

Antwerpsestraatweg இல் இருந்து பயணம் செய்தவர் நாயை பைக்கில் கட்டி தர தரவென இழுத்து சென்றதைப் பார்த்து நாயின் மீது பரிதாபம் கொண்ட மக்கள் அவரை தடுக்க முயன்ற போதும், Groeneweg வரை அவர்களால் அம்மனிதனை நிறுத்த முடியாமல் போனது.

Groeneweg வைத்து பிடிபட்டவரை பொலிசார் கைது செய்தனர். டச்சு இராணுவத்திற்கு உதவி செய்யும் குழுவான Koninklijke Marechaussee குழுவும் இவரை தடுக்க உதவியது. அந்த நாயானது ஒரு கால்நடை வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்நபரின் ட்ரைக்கை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

 

drunk trike driver dragged dog, drunk trike driver dragged, drunk trike driver, trike driver dragged dog, driver dragged dog, Tamil Netherland news, Netherland Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/woman-resuscitated-bakery-born-baby/

Tamil News Groups Websites