(Boni Kapoor Kids Get together Sonam Ananth Wedding Reception)
நேற்றைய தினம் மும்பை நட்சத்திர விடுதியில் சோனம் கபூர் ஆனந்த் அகுஜா வின் திருமணம் திருவிழா போன்று ஆடம்பரமாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றைய தினம் இரவு மும்பையில் உள்ள பிரபலமான ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது.
இந்தி நட்சத்திரங்களான அபிஷேக், ஐஸ்வர்யா, சல்மான், ஷாருக்கான், கஜோல், வித்யா பாலன், அலியா பட், ரன்வீர் சிங், ரன்பீர், அர்ஜுன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே திரண்டு வந்திருந்தது.
அந்த வகையில் சோனமின் பெரிய தாயார் ஸ்ரீதேவி சமீபத்தில் காலமாகியிருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் போனிகபூரின் முதல் மனைவியின் பிள்ளைகளான அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் இது நாள்வரை தமது தந்தையாருடன் பேசியதில்லை.
தமது அம்மாவை, அப்பா போனிகபூர் பிரிந்த பின்னர் அவர்கள் இருவரும் தந்தையாரிடம் இருந்து ஒதுங்கியிருந்தனர். ஸ்ரீதேவியின் மரணத்தின் பின்னர் அவரின் பிள்ளைகளான ஜான்வி, குஷி இருவருடனும் மிகவும் பாசமாக இருக்க ஆரம்பித்துள்ளனர் அர்ஜுன் மற்றும் அன்சுலா.
இதனை மீண்டும் நிரூபிக்கும் முகமாக நேற்றைய தினம் இடம்பெற்ற கபூர் வீட்டுக் கல்யாணத்தின் வரவேற்பு விருந்துபசாரத்தில் நால்வரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஊடகங்களுக்கு ஒன்றாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Tag: Boni Kapoor Kids Get together Sonam Ananth Wedding Reception