(Confrontation two parties Three people escape)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளில் இரு கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் நேற்றைய தினம் இடம்பெற்றன.
இதனையடுத்து, இரண்டு தரப்பினரும் பேரூந்துகளில் வீடு திரும்பிய நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம் நோர்வூட் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மேலும் மூவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மோதல் சம்பவத்தின் போது, இரண்டு தரப்பினரும் பயணித்த பேரூந்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
More Tamil News
- மன்னாரில் மின்னல் தாக்கம் ; மூன்று வீடுகள் சேதம்
- ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து ; சுற்றுலாப் பயணிகளே அவதானம்
- பனை வளத்தை பாதுகாக்கக் கோரி வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Confrontation two parties Three people escape