தொடைகளின் கருமையை போக்கி பளபளப்பாக்குவது எப்படி? இதோ சில டிப்ஸ்

0
1384

பொதுவாக தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும்.

கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய சில அழகு குறிப்புகளை உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

கற்றாழை பசையைக் 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.
சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும். தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.
தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபளவென மாறும்.