கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 131பேர் உயிரிழப்பு

0
471

உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, நாளுக்கு நாள் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதோடு 131பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 66ஆயிரத்து 103பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19ஆயிரத்து 664பேர் உயிரிழந்துள்ளனர்.

57ஆயிரத்து 020பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 848பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறு இலட்சத்து 89ஆயிரத்து 419பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.