பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கையை மீறி இன்று ஸ்காட்லாந்து செல்லவுள்ளார்.
கொரோனா தடுப்பூசி மையங்களை பார்வையிடவும், அங்குள்ள தடுப்புசி மைய பணியாளர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காகவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ஸ்காட்லாந்துக்கு செல்லவுள்ளதாக புதன்கிழமை அறிவித்திருந்தார்.
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானிய அரசுடன் இணைந்து ஸ்காட்லாந்து செயல்படுவதற்கான தேவையை அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் இன்று சென்ட்ரல் பெல்ட் இருப்பிடத்தைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது பயண முடிவு குறித்து ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜனிடம் நேற்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்போது, தலைவர்களும் பொது மக்கள் மீது விதிக்கும் அதே விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும், “ஸ்காட்லாந்தில் அனைவருக்கும் வரவேற்பு உண்டு, அதில் பிரதமர் ஒன்றும் விரும்பத்தகாதவர் அல்ல, ஆனால் நாம் உலகளாவிய தொற்றுநோய்களுக்கு இடையில் வாழ்வதால், இந்தப் பயணம் அத்தியாவசியமானது இல்லை” என்று எச்சரித்தார்.
மேலும் பேசியா அவர் “வழிநடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த நிலையில் ஸ்காட்லாந்திற்கு பிரதமர் வருகை தருவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை” என்றும் கூறினார்.