(aluthkade court shooting one arrested)
புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை – சேக்குவத்தைப் பகுதியில் வைத்து, குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும், குறித்த நபர் கொழும்பு – 12 ஐ சேர்ந்த 29 வயதுடைய நபர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதோடு, இதன்போது கொல்லப்பட்ட நபர் பாதாளக் குழுவின் தலைவர் மாக்கந்துர மதுஷூடன் தொடர்புடைய மொஹமட் ரிஸ்பான் என்பவராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:aluthkade court shooting one arrested,aluthkade court shooting one arrested