இந்தியாவில் மனைவி ஓடிப்போன கோபத்தில் கடந்த 24 வருடங்களில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்த தொடர் கொலையாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்திய மாநிலம் தெலுங்கானாவில் கடந்த ஜனவரி 4-ஆம் திகதி ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூன்று நாட்களுக்கு முன்னதாக காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அவரது கணவரால் புகார் அளிக்கப்பட்ட பெண் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், சில சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கிடைத்தது. அதன்முலம், கடந்த டிசம்பர் மாதம் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த நபர் தான் இதையும் செய்துள்ளான் என்பது பொலிஸுக்கு தெரியவந்தது.
பின்னர் 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸார் கடந்த செவ்வாய கிழமை கொலையாளி மைனா ராமுலுவை அதிரடியாக கைது செய்தனர்.
ஆனால், அவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
45 வயதான மைனா ராமுலு கடந்த 24 வருடங்களில் மேலும் 16 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லர் என்பது தெரியவந்தது.
அவருக்கு 21 வயது இருந்தபோது, அவரது பெற்றோர் பெண் பார்த்து திருமணம் செய்துவைத்துள்ளனர். ஆனால், அப்பெண் சில நாட்களில் வேறொரு நபருடன் ஓடிவிட்டார்.
இதனால் பெண்கள் மீது கோபத்தை வளர்த்துக்கொண்ட ராமுலு, இவ்வாறு தொடர் கொலைகளில் இடுப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு பெண்களையும் தனது ஆசைக்கு இணங்கினால் பணம் தருவதாகக் கூறி அழைத்துசென்று, கற்பழித்தது கொலைசெய்து, பின்னர் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் எடுத்துக்கொள்வது ராமுலுவின் வழக்கம்.
இவ்வாறு 2003 மற்றும் 2019க்கு இடையில் 16 கொலைகளை அவர் செய்துள்ளான்.