சுவிஸ் ரயில்களில் பயணிகள் வேண்டுமென்றே மெதுவாக சாப்பிடுகிறார்களாம், எதையாவது மென்றுகொண்டும் குடித்துக்கொண்டும் இருக்கிறார்களாம்.
அதாவது, சுவிஸ் ரயில்களில் மாஸ்க் அணிவது கட்டாயம், ஆனால், உணவு உண்ண மற்றும் பானங்கள் அருந்த அனுமதியுண்டு.
இந்த அனுமதியை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் பலர், மாஸ்க் அணிவதிலிருந்து தப்புவதற்காக, ரயிலில் ஏறியதும் மெதுவாக எதையாவது சாப்பிடுவது, குடிப்பது என நேரத்தைக் கடத்துகிறார்களாம்.
ஆகவே, இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக, சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகளிடம்
பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம், சூரி
ச்சில் மது
பான விடுதிகள் மூடப்பட்டுள்ளதால், கடைகளிலிருந்து மதுபானம் வாங்கும் இளைஞர்கள், அதை குடிப்பதற்காகவே ரயில்களில் பயணிப்பதாகவும் தெரியவந்துள்ளது.