கத்தார் அமீர் நாடாளுமன்ற சங்கத் தலைவருடன் சந்திப்பு.!

0
468

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (26-01-2021) அமிரி திவான் அலுவலகத்தில் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர் (IPU) H E Duarte Pacheco அவர்களை சந்தித்தார்.நாடாளுமன்ற சங்கத்தின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட H E Duarte Pacheco அவர்களை வெற்றி அடைய வேண்டும் என கத்தார் அமீர் வாழ்த்தினார்.

கூட்டு நாடாளுமன்ற ஒத்துழைப்பை ஆதரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் கத்தார் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர் கத்தார் அமீருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், வருகின்ற அக்டோபர் மாதம் ஷூரா கவுன்சில் தேர்தலை நடத்துவதாக அறிவித்த கத்தார் அமீருக்கு H E Duarte Pacheco அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்த சந்திப்பில், ஷுரா கவுன்சில் சபாநாயகர் H E Ahmed bin Abdullah bin Zaid Al Mahmoud அவர்கள் கலந்து கொண்டார், கத்தார் மற்றும் நாடாளுமன்ற சங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.