அமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு!

0
1081
Saudi sisters US dead body

அமெரிக்காவில் தஞ்சம் கோரியிருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த டலா பெரியாவும்,(16)ரொட்டானா பரியா என்ற இருசகோதரிகளின் சடலங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் மன்ஹட்டனில் (Manhattan) உள்ள ஹட்சன் (Hudson) ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Saudi sisters US dead body

சவுதி அரேபியாவை சேர்ந்த இரு சகோதரிகள் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

எனினும் அவர்களின் உடலில் எந்த வித காயங்களும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரிகள் இருவரும் தங்கள் தாயுடன் 2015ம் ஆண்டுஅமெரிக்காவில் புகலிடம்கோரி விண்ணப்பித்திருந்தனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சகோதரிகள் இருவரும் வீட்டைவிட்டு ஓடும் பழக்கமுள்ளவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 250 மைல் தொலைவில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டமை மர்மமாகவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் சவுதி தூதரகத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்ததாக தெரிவித்துள்ள செய்திச்சேவையொன்று அவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் சகோதரிகளின் மரணம் குறித்து இதுவரை மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

tags :- Saudi sisters US dead body

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்