ஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி

0
681
least 25 people killed helicopter crash Afghanistan

ஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் இராணுவம் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் ஃபராஹ் மாகாணத்திலிருந்து இன்று (புதன்கிழமை) புறப்பட்ட இரண்டு இராணுவ உலங்குவானூர்திகளில் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில்தான் இந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ஃபராஹ் மாகாணத்தில் கடந்த மே மாதம் முதல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்று அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்தத் தாக்குதல் குறித்தும் தலிபான்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

2001-ல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்துள்ளது இதுவே முதல் முறை.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைக் காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- least 25 people killed helicopter crash Afghanistan

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்