பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு

0
1066
retired judge Pakistan registered 2,224 cars

பாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired judge Pakistan registered 2,224 cars

நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள நிலையில் வேறொரு பதிவு எண் கொண்ட கார் செய்த விதிமீறலுக்கு தனது கட்சிக்காரருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி சார்பில் அவரது வழக்கறிஞர் பஞ்சாப் மாகாண வரிவிதிப்பு துறை அதிகாரிகளை அணுகி விசாரித்தார்.

அப்போது சிக்கந்தர் ஹயாத் பெயரில் மொத்தம் 2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் தான் பயன்படுத்தாத காருக்கு அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பஞ்சாப் வரிவிதிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

tags :- retired judge Pakistan registered 2,224 cars

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்