பொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்

0
600
British Princess Merkal lying

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் பொய்யுரைத்துள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. British Princess Merkal lying

இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய இளவரசி மெர்க்கல் Fiji நாட்டிலுள்ள பல்கலைகழத்தில் சிறப்புரையாற்றியிருந்தார். அந்த உரையின்போது, உலகில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்வி என்பது மிக முக்கியம். பல பெண்கள் இன்றுவரை கல்விக்காக சிரமங்களை எதிர்கொண்டுதான் மேலே வந்திருக்கிறார்கள்.

அதில் நானும் ஒருத்தி, ஸ்கொலர்ஷிப் உதவியுடன் எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். பகுதி நேர வேலைபார்த்து கிடைத்த பணத்தில் தான் எனது பல்கலைக்கழக படிப்பை முடித்தேன் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த உரை அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் மெர்க்கலின் சகோதரி சமந்தா, மெர்க்கல் பொய் பேசுகிறார், அவளுக்கு தேவையான படிப்பு செலவை எனது தந்தை தான் செலுத்தினார்.

மழலையர் குழந்தை பள்ளியில் தொடங்கி பல்கலைக்கழக படிப்புவரை அனைத்து செலவுகளையும் எனது தந்தைதான் பார்த்துக்கொண்டார். மெர்க்கல் அப்படி படிக்கும்போது பணம் சம்பாதித்தாலும் அதனை ஆடை மற்றும் பார்ட்டிகளுக்குதான் செலவழித்தார் என தெரிவித்துள்ளார்.

இளவரசி மெர்க்கலின் சகோதரி வெளியிட்டுள்ள குறித்த தகவலானது தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

tags :- British Princess Merkal lying

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************