ரஜினி ஷங்கர் கூட்டணியில், சிவாஜி, எந்திரன் படங்களுக்குப் பிறகு ‘2.0’வில் உருவாகி வருகிறது. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் நடித்துள்ளனர். இது 3டியில் உருவாகியிருக்கிறது. Shankar movie 2 point 0 trailer release
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதே வேளை இப்படத்தின் டிரெய்லர் நவம்பர் 3ம் திகதி வெளியாகிறது எனத் தகவல்கள் பரவிவருகிறது.
மேலும் இந்த டிரெய்லர் வெளியீட்டை ஒரு நிகழ்வாக நடத்தவும் ‘2.0’ படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.