பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை; உச்ச நீதிமன்றம்

0
563
Supreme Court says no ban sale production firecrackers

இந்தியா முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது. (Supreme Court says no ban sale production firecrackers)

பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் காற்று மாசு, சுவாசக் கோளாறும் ஏற்படுவதாகவும் இதனால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர்.

விசாரணையின் போது தங்கள் கருத்துக்களையும் தெரிவித்ததுடன், விசாரணை கடந்த ஓகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

குறிப்பாக ஒன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது, மாசு குறைவாக இருக்கும் பட்டாசுகளை மாத்திரமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Supreme Court says no ban sale production firecrackers