ஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு

0
589
Death toll Odisha Cyclone Titli amp

ஒடிசா மாநிலத்தில் டிட்லி புயலின் எதிரொலியாக பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. (Death toll Odisha Cyclone Titli amp)

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11 ஆம் திகதி கரையைக் கடந்தது.

இதனையடுத்து, பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருவதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 52 பேர் உயிரிழந்ததுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மண்சர்வு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 52 ஆக உயர்ந்துள்ளதுடன், வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2200 கோடி ரூபாய் என முதல்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Death toll Odisha Cyclone Titli amp