சபரிமலை விவகாரம் ; பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சி

0
493
woman attempted hang herself tree protest

சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் பெண் ஒருவர், மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (woman attempted hang herself tree protest)

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில், கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் பெண் ஒருவர் இன்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதற்காக அவர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரை பொலிஸாரும் பொதுமக்களும் காப்பாற்றி அழைத்து வந்தனர்.

இதற்கிடையே கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது.

இதில் பந்தளம் ராஜகுடும்பம் திருவாங்கூர் தேவசம் போர்டுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை.

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே, எதிர்வரும் நாட்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் கூறப்படுகின்றது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; woman attempted hang herself tree protest