உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பின்னர் சபரிமலை கோவில் நடை, நாளை முதல் முறையாக திறக்கப்படுவதால் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. (Sabarimala Temple Open Heavy Police Protection)
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை அமுல்படுத்த போவதாக கேரள மாநில அரசு அறிவித்ததற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், நாயர் சங்கம், ஐயப்ப சேவா சங்கம் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்ததனால் போராட்டம் தீவிரமடைந்தது.
ஏற்கனவே சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சென்றால் அவர்களை பம்பை, நிலக்கல், பந்தளம் பகுதிகளில் தடுத்து நிறுத்துவோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்துள்ளன.
சிவசேனா இது தொடர்பாக தற்கொலை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. நிலக்கல், பம்பை பகுதிகளில் ஆதிவாசி சங்கடன சமிதி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றது.
சபரிமலைக்கு வரும் பெண்களை வீதிகளில் படுத்து தடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும் ஐயப்ப பக்தர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் சபரிமலை பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பெண் பக்தர்கள் பாதுகாப்புக்காக சபரிமலையில் பெண் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று முதலில் கூறப்பட்டது. இதுதொடர்பாக பொலிஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மாநில அரசுக்கு பரிந்துரையும் செய்திருந்தார்.
தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் சபரிமலை பாதுகாப்பு பணி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும் பெண் பொலிஸாரை அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப் போவதில்லை என்று தேவசம் போர்ட் அறிவித்துள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்
- செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி
- பெருமாள் கோவில் 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு
- பெற்ரோல், டீசல் விலை குறைப்பு; பிரதமர் மோடி யோசனை
- இளம் பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு
- பிரதமர் மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்
- பாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Sabarimala Temple Open Heavy Police Protection