பெருமாள் கோவில் 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு

0
640
Madurai near temple robbery police inquiry

மதுரை குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் நிலக்கோட்டை அருகே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Madurai near temple robbery police inquiry)

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லப்பெருமாள் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

இந்தக் கோவில் அருகே குருபகவான் கோவிலும் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசபெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டது.

இதுகுறித்து கோவில் செயலாளர் செந்தில் குமார் காடுபட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், 4 தனிப்படைகள் அமைத்து சிலைகளை கொள்ளையடித்த நபர்களை தேடி வந்தனர்.

உசிலம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டியை சேர்ந்த கணேசன் என்றவர் தனது மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

இரவு 11.45 மணி அளவில் நிலக்கோட்டை அருகில் உள்ள உத்தப்பநாயக்கனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது வீதியோரம் ஏதோ மின்னுவது போன்று தென்பட்டது.

உடனடியாக தனது வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்த போது சாமி சிலைகள் இருந்ததை பார்த்துள்ளார்.

இதுகுறித்து விளாம்பட்டி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் தெரிவித்ததுடன், அவரது தலைமையில் பொலிஸார் அங்கு வந்து சிலைகளை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இது சித்திர ரத வல்லப்பெருமாள் கோவிலில் கொள்ளை போன சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சமய நல்லூர் டி.எஸ்.பி மோகன் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில் விளாம்பட்டி பொலிஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது, அந்த சிலைகள் குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன சிலைகள் என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து சோழவந்தான் பொலிஸ் நிலையத்திற்கு 4 சிலைகளும் எடுத்துச் செல்லப்பட்டது. சிலைகளை கடத்தி சென்ற கும்பலை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Madurai near temple robbery police inquiry