நாடாளுமன்றத்தில், ஒட்டுமொத்த இளையோர் குரலாக இருப்பேன்: பிரபாகரன்!

0
690
youngest overall voice, prabagaran, prabagaran party, malaysia tamil news, malaysia 14 election,

{ youngest overall voice }

மலேசியாவில், இளைஞர்களைப் பிரதிநிதிக்க ஒரு குரல் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் நான் அரசியல் களத்திற்கு வந்தேன் என பிகேஆர் ஆதரவு பெற்ற பத்து நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பி.பிரபாகரன், கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்.

நாடாளுமன்றத்தை இளைஞர்கள் ஆள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். வாக்களிப்பது மட்டும் மக்களாட்சி ஆகிவிடாது. இந்த வாய்ப்பை, இளைஞர்களை மேம்படுத்தும் ஒரு தளமாக நான் பயன்டுத்துவேன் என்றார் அவர்.

சாவி சின்னத்தில் போட்டியிடும் 22 வயதே நிரம்பிய பிரபாகரன், பக்காத்தான் ஹராப்பானைப் பிரதிநிதிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் நிகழ்த்திய தனது முதல் உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அரசியல் உரை நிகழ்த்தி அனுபவமில்லாத பிரபாகரன், “இளைஞர்களே,எங்கிருக்கின்றீர்கள்?” என உரக்க கோஷமிட்டு தனது இரண்டு நிமிட உரையைத் தொடங்கியுள்ளார்.

இதனிடையே, நேற்றிரவு செந்தூலில் நடைபெற்ற பிரபாகரனின் தேர்தல் பிரசாரத்திற்கு, பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா வந்திருந்துள்ளார்.

இரண்டு தவணைகளாக பத்து தொகுதியை தன்வசம் வைத்திருந்த தியான் சுவா, தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் இம்முறைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. எனினும், பிரபாகரனுக்கு அவர் தமது முழு ஆதரவை வழங்கி வருகின்றார்.

பிரபாகரன் அரசியலுக்குப் புதியவர்; பச்சை மண். ஆனால், கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றார். அவரது துணிச்சலைப் பாராட்டுகின்றேன் என தியான் சுவா கூறியுள்ளார்.

இதனிடையே, “நான் மீண்டும் வருவேன். இது தற்காலிகமே” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: youngest overall voice

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்

*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!

*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்

*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!