இரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்

0
610
India lashes out Pak chemical weapons accusation

ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவம் இரசாயன தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. (India lashes out Pak chemical weapons accusation)

ஜம்மு காஷ்மீரில் வசித்துவரும் பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சு சார்பில் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்கள் மீது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை.

சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் நோக்கில் பாகிஸ்தானின் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது. ஆனால் அதில் பாகிஸ்தான் வெற்றி பெறப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; India lashes out Pak chemical weapons accusation