லண்டன் நோக்கி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்

0
422
passenger heading London man suffered heart attack

லண்டன் நோக்கி வந்த பயணிகள் விமானத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த நபருக்கு தீடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் பரிதாபமாக இறந்துள்ளார். passenger heading London man suffered heart attack

வியட்நாமிலிருந்து லண்டனுக்கு வியட்நாம் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்த பிரித்தானியாவைச் சேர்ந்த நபருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு விமானத்தில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும், அவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அருகிலிருக்கும் ரஷ்யாவின் Sochi சர்வதேச விமானநிலையத்தில் விமானம் தரையிரங்கியுள்ளது.

இருப்பினும் அந்த நபர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த நபர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அவரின் உடல் பிரித்தானியாவிற்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் விமானநிலையத்திற்கு வந்த பின்னரே அவரைப் பற்றிய முழுவிபரம் தெரியவரும் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

tags :- passenger heading London man suffered heart attack

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************