பசிபிக் கடலுக்குள் உள்ள தீவு நாடான மைக்ரோனேசியாவில் பயணியர் விமானம் ஒன்று ரன்வேயைக் கடந்து கடலில் இறங்கியது. Passenger jet aircraft 47 Pacific Sea
மைக்ரோனேசியாவின் Phonpei-யில் இருந்து பப்புவா நியூகினியாவின் port moresby விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் நியுகினி (Air Niugini) என்ற விமானம், அந்நாட்டு நேரப்படி வெள்ளியன்று காலை ஒன்பதரை மணிக்கு இடை நிறுத்தமான வினோ (Weno) தீவில் தரையிறங்க முயன்றது. ஆனால், ரன்வேயைத் தாண்டி 160 மீட்டர் வரை பயணித்த விமானம், கடலில் இறங்கியது.
அதில் இருந்து 36 பயணிகள் உள்ளிட்ட 47 பேர் விமானத்தில் இருந்து வெளியேறி உதவி கோரினர். விமானம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்ட தீவு வாசிகள், படகுகளுடன் சென்று அவர்களை மீட்டனர்.
இதில் ஒரு பயணிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளிவராத நிலையில் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
tags :- Passenger jet aircraft 47 Pacific Sea
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- 10 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவனை பாதியில் காப்பாற்றிய இளைஞர்
- ஈராக்கில் பெண் மனித உரிமை ஆர்வலர் சுட்டுக்கொலை
- சீனாவில் ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகள்
- 2ம் உலகப்போரின் போது நாஸி படையினர் பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு
- வயிற்றுப்பகுதியை முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்கு முன் துபாய் வாலிபர் செய்த செயல்
- வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா? – பூமியை போன்று 2 உலகங்கள் கண்டு பிடிப்பு
- இத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்த காதல் ஜோடி
எமது ஏனைய தளங்கள்