பிரான்ஸ் Chesnay (Yvelines) இல் ஆடை விற்பனை நிலையத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு, ஆடைகள் அணிந்து பார்க்க அனுமதி மறுக்கப்பட்டமையானது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. France Pimkie shop insult handicapped women
Chesnay இலுள்ள Pimkie ஆடையகத்துக்கு சக்கர நாற்காலியில் சென்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ஆடைகள் அணிந்து பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. அக்கடையில் மாற்றுத்திறனாளிகள் ஆடைகள் அணிந்து பார்க்க அமைக்கப்பட்ட அறையை அங்கு வேலை செய்யும் பணிப்பெண்கள் தங்கள் தேவைக்கு பயன்படுத்துவதால், ஆடைகள் அணிந்து பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து அந்த பெண் வெளியேறியதுடன், இந்த தகவலை அப்பெண்ணின் தாயார் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. பலர் அக்கடையினை பற்றி முறைப்பாடு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அக்கடையின் ஆடை விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் Pimkie நிறுவனம், இதை ‘ஏற்றுக்கொள்ள முடியாத தவறு’ என தெரிவித்து அப்பெண்ணிடமும், அவரின் தாயாரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது.