மர்மமான முறையில் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர்!

0
589
Eastern University Female Lecturer Disappear Tamil News

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த , கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ளாரென, நிலாவெளி மற்றும் துறைமுக பொலிஸ் நிலையங்களில் இன்று (21) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Eastern University Female Lecturer Disappear Tamil News

29 வயதுடைய நடராசா போதநாயகி என்பவரே காணாமல் போயுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (20), விடுமுறை பெற்று வீட்டுக்குச் செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் காவலாளிகளும், இவர் முச்சக்கர வண்டியில் சென்றதை அவதானித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் விரிவுரையாளரின் பை மற்றும் காலணி போன்ற பொருட்கள் இன்று காலை (21), திருகோணமலை சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Live

Tamil News Group websites