Home India பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு

பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு

0
பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு

பெற்ரோல் விலை லீட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, டீசல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. (petrol price increased yet Chennai Today India News in Tamil)

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெற்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து பெற்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகின்றது.

கடந்த 2 நாட்களாக பெற்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் பெற்ரோலின் விலை 10 காசுகளால் உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சென்னையில் இன்று ஒரு லீட்டர் பெற்ரோல் 85.58 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு லீற்றர் டீசல் நேற்றைய விலையான 78.10 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை, மகராஷ்டிராவின் ஒருசில பகுதிகளில் ஒரு லீற்றர் பெற்ரோல் 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தினமும் விலை உயர்த்தப்படுவதை பார்க்கும் போது, இன்னும் சில நாட்களில் ஒரு லீட்டர் பெற்ரோல் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என்றும் நம்பப்படுகின்றது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; petrol price increased yet Chennai Today India News in Tamil, Tamil News Online, Today News in Tamil, Latest Tamil News