செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman’s leadership demonstrated emphasis release seven tamils
சிறைக்கொட்டடியிலே கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் நமது உறவுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு அப்பாவி தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் எதிர்வரும் 21-09-2018, வெள்ளிக்கிழமை, மாலை 03 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
அவ்வயம் மாநிலம் முழுமைக்கும் உள்ள நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்று, ‘எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை’ என உலகிற்கு பறைசாற்ற அழைக்கிறோம்.
குறிப்பு: இக்கோரிக்கை ஆர்ப்பாட்டத்தைப் பேரெழுச்சியாக நடத்தும் பொருட்டு நாம் தமிழர் கட்சியின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்
- இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு
- ஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு
- சாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா
- கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’