பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆப்ராம் விநாயகரை வணங்கிய போது எடுத்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாருக்கானை திட்டி தீர்த்துள்ளனர். ஷாருக்கான் தனது பங்களாவில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். Actor Shahrukh khan Vinayaga sthoorthi celebration post controversy
அதனை பார்த்த ரசிகர்களில் சிலர், நீங்கள் எல்லாம் என்ன மாதிரி முஸ்லீம்? இப்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறீர்களே என்று விளாசியுள்ளனர். அதே சமயம் சிலர், மதபேதம் பாராமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷாருக்கானை வாழ்த்தி உள்ளனர்.
மேலும், பாலிவுட் பிரபலங்கள் மத பேதம் பார்க்காமல் பண்டிகைகளை கொண்டாடும் பழக்கம் உள்ளவர்கள். அத்துடன் ஷாருக்கானின் மனைவி கௌரி இந்து மதத்தை சேர்ந்தவர். அதனால் ஷாருக்கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.