( Singapore success world talents )
சிங்கப்பூர் அதன் வெற்றியை உறுதிப்படுத்த அனைத்துலகத் திறனாளர்களை வரவேற்கத் தயாராக இருப்பது அவசியம் என்று அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
வர்த்தக, தொழில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் ஆற்றிய முதல் அதிகாரத்துவ உரையில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் , சிறந்த யோசனைகளைக் கொண்ட ஆகச் சிறந்த திறனாளர்கள் சிங்கப்பூரில் இருப்பது அவசியம், அவர்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றி நாட்டின் பொருளியலை வளர்க்க உதவுவர் என்று திரு. சான் தெளிவாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் குறைந்த சம்பளமும் குறைந்த உற்பத்தித்திறனும் கொண்ட துறைகளைச் சார்ந்திருக்கும் போக்கிலிருந்து விலகிவரும் சூழலில் திறனாளர்கள் சரியான முறையில் வேலை செய்வது அவசியம் என்று கூறியுள்ளார் அமைச்சர் சான்.
tags:-Singapore success world talents
most related Singapore news
16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
**Tamil News Groups Websites**