சிவராஜ் வெற்றிக்குத் துணை புரிவேன்..! டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி

0
641
support Sivaraj success Danzie Cavius, Danzie Cavius, Sivaraj, malaysia tamil news, malaysia 14 election,

{ support Sivaraj success Danzie Cavius }

மலேசியாவில், கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிடும், ம.இ.கா. வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரனின் வெற்றிக்கு துணை புரிவேன் என மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கூறியுள்ளார்.

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மைபிபிபி கட்சி தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது.

இருந்தபோதிலும், அந்த தொகுதி மீண்டும் ம.இ.கா.விற்கு வழங்கப்பட்டதில் அதிருப்தி இருந்ததையும் அவர் நினைவுறுத்தியுள்ளார். ஆனால் இப்போது பொதுத் தேர்தல்தான் முக்கியம்.

அந்த அடிப்படையில் சிவராஜ் சந்திரனின் வெற்றிக்கு நிச்சயம் துணை புரிவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

கேமரன்மலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது மைபிபிபி, தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு அனைத்து தொகுதியிலும் ஆதரவு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கேமரன்மலை வாக்காளர்களை தேசிய முன்னணி கொண்டு வர தாம் துணை புரிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

அந்த வகையில் சிவராஜின் வெற்றிக்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக டான்ஸ்ரீ கேவியஸ் கூறியுள்ளார்.

அவர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு கொண்டு வர தாம் உதவி புரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: support Sivaraj success Danzie Cavius

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்

*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!

*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்

*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!