பிக்பாஸ் சீசன் 1 இல் பங்குபற்றி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த காய்தரி ரகுராம் தற்போது விருந்தினராக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளார். Bigg boss Gayathri argued withh Mumtaz gossip
நேற்று காலை பிக் பாஸ் வீட்டில் பாடலுக்கு டான்ஸ் ஆடாமல் மும்தாஜ் முகத்தை மூடிக் கொண்டு தூங்கினார். பின்னர் அங்கு சென்ற காயத்ரி மும்தாஜ் வைத்திருக்கும் ஹை ஹீல்ஸை பார்த்துவிட்டு உங்களின் பிரச்சினைக்கு இதை நீங்க போடக் கூடாதே என்றார். எனக்கு முழங்காலில் பிரச்சினை இல்லை, இடுப்பில் தான் என்று விளக்கம் அளித்தார் மும்தாஜ். இடுப்பு பிரச்சனையாக இருந்தாலும் ஹீல்ஸ் போடக் கூடாது என்றார் காயத்ரி. உடனே எப்ப இந்த காயத்ரி கிளம்புவார் என்பது போன்று ஒரு லுக் விட்டார் மும்தாஜ்.
ஆர்த்தி தன் கையில் ருத்ராட்சை அணிந்திருப்பதை பார்த்த ஐஸ்வர்யா மகத் இப்படித்தான் அணிந்திருந்தான் என்றார். அப்ப ஏன் மகத்துக்கு அவ்வளவு கோபம் வந்தது. ருத்ராட்சை அணிந்தால் கோபம் குறைந்துவிடுமே என்றார் ஆர்த்தி. இதை கேட்ட காயத்ரியோ அப்படி என்றால் நானும் ஒன்று அணிய வேண்டும். பிக் பாஸ் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற பிறகு கோபம் அதிகமாக வருகிறது என்றார்.