வனவிலங்கு இறைச்சிகளை வேட்டையாடி உண்ட மஹிந்த அரசாங்கம்; அதிர்ச்சித் தகவல்

0
6742
Eating Wild animals meat mahinda rajapaksa government

(Eating Wild animals meat mahinda rajapaksa government)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத வனவிலங்கு இறைச்சிகளை வேட்டையாடி, நிறைவேற்று அதிகாரிகளுக்கு விருந்துபசாரம் செய்யப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

வனவிலங்குகளான மான், மரை, காட்டு பன்றி, காடை இறைச்சி போன்ற பல்வேறு மிருகங்களின் இறைச்சிகள் தேசிய விருந்துபசாரத்தின் போது வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

மஹிந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை நிர்ணயிக்கும் பொறுப்புள்ள நிறைவேற்று அதிகார உறுப்பினர்கள், கூட்டாக இணைந்து சட்டவிரோத மாமிசங்களை உண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம் கூடிய பின்னர், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வில் சட்டவிரோதமாக காடுகளில் வேட்டையாடப்பட்ட மிருகங்களின் மாமிசங்கள் உண்ணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது இராணுவத்திற்கு தலைமை வகித்த இராணுவ தளபதி கூட சட்டவிரோத மாமிசங்களை உண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு சபையின் வழக்கமான உறுப்பினர்களான பிரதமர், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு சபையின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி, வான்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் ஆகியோரும் இந்த விருந்துபசாரத்தில் பங்குபற்றியதாக சரத்பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது வனவிலங்குகளின் பாதுகாப்பு தனது கையில் உள்ளதால் வேட்டையாடப்பட்ட மாமிசம் உண்ணும் வசதிகள் இல்லாது போனமையினால் முன்னாள் ஜனாதிபதியும் அவரின் குழுக்களும் பீதியடைந்துள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Eating Wild animals meat mahinda rajapaksa government