எதிர்ப்பு பேரணியினால் அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது; நாமல்

0
858
government panicked Jana Balaya protest rally

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பாரிய மக்கள் வெள்ளம் இன்றைய தினம் கொழும்புக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். (government panicked Jana Balaya protest rally)

கூட்டு எதிர்க்கட்சியினரின் ‘மக்கள் பலம் கொழும்புக்கு’ எதிர்ப்பு பேரணி காரணமாக அரசாங்கம் மிகவும் பதற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸாரை கொழும்புக்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றுள்ள நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் மேலும் ஏமாற மாட்டார்கள் என்றும் மக்கள் வெள்ளம் கொழும்புக்கு வருவதன் நோக்கத்தை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; government panicked Jana Balaya protest rally