“சிங்­கள மக்­க­ளின் மனங்­களை வெற்றி கொண்டு அதன் மூல­மாக இந்த நாட்­டி­னைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டும்”

0
577

மீண்­டும் அரச தலை­வர் தேர்­தல் நடத்­து­வது நாம் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­றுதி அல்ல. இதனை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்­றோம். முத­லில் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி அர­ச­மைப்பை உரு­வாக்­க­வேண்­டும். Jayampathy Presidential Election

வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக மாறி­வி­ட­வேண்­டாம் என்­பதை இந்த அர­சின் தலை­மை­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டு­கின்­றோம். இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான ஆலோ­ச­களை வழங்­கு­வ­தற்­காக அமைக்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற வழி­காட்­டல் குழு­வின் உறுப்­பி­ன­ரா­க­வும் உள்­ள­வர் அவர். புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கத்­தின் பின்­ன­ணி­யில் கடு­மை­யாக உழைத்து வரும் ஒரு­வர்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டா­விட்­டால், நடு­நி­லை­யா­கச் செயற்­பட்­டு­வ­ரும் தமிழ்த் தலை­வர்­க­ளுக்­குப் பெரும் தாக்­கம் ஏற்­ப­டும், அவர்­கள் தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­கள் பொய்­யா­கிப்­போய்­வி­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

“புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் முழு­மைப்­ப­டுத்­தக் கூடிய நிலமை உரு­வா­கி­யுள்­ளது. இந்த ஆட்­சிக் காலத்­தி­னுள் அர­ச­மைப்பை முழு­மைப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு அர­சி­லுள்ள சகல தரப்­பி­ன­ரி­ட­மும் உள்­ளது. 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தியை அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் நிறை­வேற்­ற­வேண்­டும்.

இந்த நாட்­டின் நீண்­ட­கால அர­சி­யல் பிரச்­சினை, தமிழ் மக்­க­ளின் நெருக்­க­டி­கள், கடந்த கால அசம்­பா­வி­தங்­களை தடுக்க புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கத் தீர்­வு­கள் பெற்­றுத்­த­ரு­வ­தாக இந்த நாட்டு மக்­க­ளுக்கு அரசு வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளது.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­க­வேண்­டும் என்­றால் மைத்­தி­ரிக்­கும், ரணி­லுக்­கும் முதன்­மை­யான இரண்டு கட்­சி­க­ளுக்­கும் அக்­கறை இருக்­க­வேண்­டும். வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டும் என்ற உணர்ச்சி இருக்­க­வேண்­டும். அது இல்­லாது புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­க­மு­டி­யாது.

இன்று வாக்­கு­று­தி­களை மறந்து மீண்­டும் அரச தலை­வர் தேர்­தல் குறித்து பேசும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. அரச தலை­வர் தேர்­தல் இனி நடை­பெ­றாது என்றே நாம் ஆரம்­பம் முதல் தெரி­வித்து வந்­தோம். 2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­தல்­தான் இந்த நாட்­டில் நடை­பெ­றும் இறுதி அரச தலை­வர் தேர்­தல் என்று கூறி­னோம். மேடைக்கு மேடை அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் இத­னையே தெரி­வித்­த­னர்.

இன்று மீண்­டும் அரச தலை­வர் வேட்­பா­ளர், 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­தல் என்று கூறிக்­கொண்டு உள்­ள­னர். அரச தலை­வர் தேர்­த­லுக்கு கூட்­டணி அமைப்­பது, இர­க­சிய பேச்­சுக்­கள் நடத்­து­வது, எதி­ரி­க­ளாக இருந்­த­வர்­கள் ஒன்­றி­ணைந்து கள­மி­றங்­கு­வது என்ற பல்­வேறு சூழ்ச்­சி­க­ளும் இடம்­பெற்று வரு­கின்­றன.

இது மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­றுதி அல்ல. இதனை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்­றோம். முத­லில் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி அர­ச­மைப்பை உரு­வாக்­க­வேண்­டும். வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக மாறி­வி­ட­வேண்­டாம் என்­பதை நாமும் இந்த அர­சின் தலை­மை­க­ளுக்­குத் தெரி­விக்­கின்­றோம்.

இன்று அர­ச­மைப்பை உரு­வாக்­க­மு­டி­யா­து­போ­னால் அதன் மூல­மாக பெரிய தாக்­கம் நடு­நி­லை­யாக செயற்­பட்­டு­வ­ரும் தமிழ் அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கே ஏற்­ப­டும். தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­கும் முயற்­சி­யில் இன்று நடு­நி­லை­யான தமிழ்த் தலை­மை­கள் செயற்­பட்டு வரு­கின்ற நிலை­யில் அர­ச­மைப்பு உரு­வா­கா­த­பட்­சத்­தில் மீண்­டும் தமிழ் மக்­கள் மத்­தி­யில் முரண்­பா­டு­களே உரு­வா­கும்.

அவர்­க­ளின் உரி­மை­களை மக்­க­ளாட்­சி­யைப் பலப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தன் மூல­மாக மட்­டுமே நாட்டை வெற்­றி­கொள்­ள­மு­டி­யும். அன்று எந்­தக் கார­ணத்­துக்­காக தமிழ்த் தரப்பு போராட்­டத்­தைக் கையில் எடுத்­ததோ இன்று அதே நோக்­கத்தை வெற்­றி­கொள்ள அர­சி­யல் ரீதி­யில் பய­ணித்து வரு­கின்­ற­னர்.

ஜன­நா­யக ரீதி­யில் அவர்­கள் சிந்­தித்து சிங்­கள மக்­க­ளின் மனங்­களை வெற்றி கொண்டு அதன் மூல­மாக இந்த நாட்­டி­னைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டும் என சிந்­திக்­கின்­ற­னர். அதற்கு நாம் மதிப்­ப­ளிக்­க­வேண்­டும்.இறுதி தேர்­த­லில் வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒரு இலட்­சம் வாக்­கு­கள் பறி­போ­யுள்­ளன. இதில் 50 ஆயி­ரம் வாக்­கு­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­க­ளுக்கு சென்­றுள்­ளன. அதனை மீண்­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னால் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

ஆனால் எஞ்­சிய 50 ஆயி­ரம் வாக்­கு­கள் வடக்­கின் அடிப்­ப­டை­வாத கட்­சி­க­ளுக்கே சென்­றுள்­ளன. தமிழ் மக்களின் உரி­மை­களை பாது­காக்­க­வேண்­டும். அந்­தப் பொறுப்பு இந்த நாட்­டின் பெரும்­பான்மை மக்­க­ளி­டம் உள்ளது” என்­றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites