தனியார் பஸ் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்

0
719
private bus association struggle stop working

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தமது சங்கங்களின் கீழுள்ள பஸ்களை சேவையில் இருந்து நிறுத்தப்போவதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது. (private bus association struggle stop working)

அதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் தண்டப் பணங்களை குறைக்குமாறு கோரியமைக்கு அரசாங்கத்தினால் சரியான பதில் கிடைக்காமையின் காரணமாக தனியார் பஸ் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல காரணிகளை உள்ளடக்கி பஸ் சேவை ஊழியர்களும் குறித்த தினத்தில் இருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட தண்டப் பணங்களை குறைப்பதற்கு அரசுக்கு 14 நாட்கள் கால அவகாசம் இருப்பதாகவும் குறித்த தினத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இந்த செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; private bus association struggle stop working